
பரம்பரை அரசியல்வாதிகளுக்கே இல்லாத கெத்தும், தெனாவெட்டும் சில சமயங்களில் பார்ட் டைம் பாலிடீஸியன்களுக்கு வந்துவிடும். அதற்கு மிக சரியான உதாரணம் அனிதா குப்புசாமி.
பாட்டு, பட்டிமன்றம், குடும்பம், குடித்தனம் என்று இருந்த அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஃபுல் டைம் அரசியல்வாதியாக இல்லாமல், ‘நட்சத்திர பேச்சாளர்’ எனும் தோரணையுடன் பார்ட் டைம் அரசியல் மட்டும் செய்து வந்தார். எல்லாம் ஜெயலலிதாவின் ஆசியால் ஓடியது.
ஆனால் ஜெ., மறைவுக்குப் பின் இவரது எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை எடப்பாடி அண்கோ கண்டு கொள்ளவில்லை. இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அக்கட்சியை விட்டு விலகியிருக்கும் அனிதா, பன்னீர் - பழனிசாமி இருவரையும் போட்டு விளாசி தள்ளுகிறார்.
இந்நிலையில், ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கேட்டதற்கு, “தங்களை தொடர்ந்து காட்டுவதற்கு மீடியா இருக்கிறது எனும் மமதையில் இவர்கள் திரிகிறார்கள். இவர்கள் செய்வதையெல்லாம் பரபரப்புக்காக போடும் மீடியாக்கள், இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அதன் பிறகு இப்படியெல்லாம் வரமாட்டார்கள். இவர்களால் எம்.ஜி.ஆர். ஆகிட முடியாது. காமராஜரும், கக்கனும் வாழ்ந்த அரசியலில் இவர்களா?
நானும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகைதான். ஆனால் அது சினிமாவோடு சரி. தனது வாய்ஸிற்கு பெரிய வரவேற்பும், சக்தியும், மரியாதையும் இருக்கிறதென ரஜினி நம்பிக் கொண்டிருக்கிறார். அது தவறு. 1996-ல் ரஜினி வாய்ஸ் கொடுத்ததால்தான் தி.மு.க. ஜெயித்தது என்பதெல்லாம் அபத்தம். அன்றைய அ.தி.மு.க. ஆட்சியானது மக்களுக்குப் பிடிக்காததால்தான் தூக்கி எறிந்தார்கள். அதனால் அந்த நம்பிக்கையானது பொய்! என்பதை அவர் உணர வேண்டும்.
கமலும், ரஜினியும் இனிமேலும் ஹீரோக்களாக நடிப்பது சிரமம். அதனால் கட்சி தொடங்குகிறார்கள். ரசிகர்கள் பட்டாளம் என்பது வேறு, அரசியல் வேறு. ரசிகர்களை நம்பி கட்சி துவங்குவது முட்டாள்தனம்.” - என்று தூர்வாரி துவம்சம் செய்திருக்கிறார்.
பபார்றா!