முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக கொளத்தூரில் ஸ்டாலின்.. 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார்.

Published : May 17, 2021, 11:57 AM IST
முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக கொளத்தூரில் ஸ்டாலின்..  2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார்.

சுருக்கம்

இறுதியாக கொளத்தூர் தொகுதியில் உள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் மாஸ்க் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கினார்.   

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு நடந்தியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முக ஸ்டாலின் முதல் முறையாக அவரது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். 

முதலாவதாக திருவிக நகர்  மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து, தடுப்பூசி செலுத்திய பொது மக்களிடம் உரையாற்றினார். அதனை தொடர்ந்து சென்னை அயனாவரம் ஆண்டர்சன் ரோட்டில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார். 

அதனை தொடர்ந்து பெரம்பூர் பேப்பர் மில் சாலை, ராஜா கார்டன் குடிசை மாற்று வாரிய அருகில் உள்ள ரேஷன் கடையில் 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார். இறுதியாக கொளத்தூர் தொகுதியில் உள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் மாஸ்க் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கினார். 

 

PREV
click me!

Recommended Stories

இதைக்கூட செய்ய முடியலனா அப்புறம் எதுக்கு முதல்வர் பதவி..! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!