இன்று முதல் இ- பதிவு கட்டாயம்... அமலுக்கு வந்தது உத்தரவு..!

Published : May 17, 2021, 11:14 AM ISTUpdated : May 17, 2021, 12:13 PM IST
இன்று முதல் இ- பதிவு கட்டாயம்... அமலுக்கு வந்தது உத்தரவு..!

சுருக்கம்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், உறவினர் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்ய இ- பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை இணையதளத்தில் ((www.eregister.tnega.org)) பதிவு செய்து, உடனடியாக பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!