டெல்டாவின் கல்வி காவலர் பூண்டி துளசி வாண்டையார் காலமானார்..!

By Thiraviaraj RM  |  First Published May 17, 2021, 10:55 AM IST

கல்வித்தந்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் அய்யா(வயது 93) அவர்கள் வயது முதிர்வால் காலமானார்.


கல்வித்தந்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் அய்யா(வயது 93) அவர்கள் வயது முதிர்வால் காலமானார்.

1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் துளசி அய்யா வாண்டையார். சென்னை சாலிகிராமம் வீட்டில உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Latest Videos

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் பிறந்த துளசி அய்யா வாண்டையார் ஆரம்ப காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பூண்டியில் கலை - அறிவியல் கல்லூரியை தொடங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு துணையாக இருந்து கல்விக் காவலர் என பெயர் பெற்றவர்.

இவர் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1991 முதல் 96 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருடன் நெருங்கிய பழக்கமுடைய இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை வகித்த இவர் 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

click me!