அரெஸ்ட்  ஆகிறாரா ஸ்டாலின் ?  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்குப் பதிவு….

First Published Apr 6, 2018, 8:28 AM IST
Highlights
stalin to be arrest fir file in triplicane police station


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்டோர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை  கடற்கரை காமராஜர் சாலையில் தடையை மீறி  மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டாலின் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சிறிது நேரம் கழித்து போலீசார் விடுவித்தனர். 

இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட  ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடையை மீறி போராட்டம், போக்குவரத்து இடயூறு   உள்ளிட்ட 5  பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஸ்டாலின்  மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

click me!