ஷகிலாவுடன் கமலை விமர்சித்து பேசிய டி.ராஜேந்தர்..! வெடிக்குமா சர்ச்சை...!

 
Published : Apr 05, 2018, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
ஷகிலாவுடன் கமலை விமர்சித்து பேசிய டி.ராஜேந்தர்..! வெடிக்குமா சர்ச்சை...!

சுருக்கம்

trajenthar compare with kamalahaasan for shakeela

திரையுலகில் இருந்து அரசியலுக்கு புதிதாக வந்துள்ளவர் நடிகர் கமலஹாசன். இவரை திரையுலகில் இருந்த போது நட்பு பாராட்டியவர்கள் அரசியலுக்கு வந்ததும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் அரசியல் வாதியுமான டி.ராஜேந்தர், கமலை தன்னுடைய நண்பன் என்று திரையுலகை பொறுத்தவரை கூறிக்கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்கிறார். தற்போது இவர் கமலஹாசனை ஷகிலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கமலின் கூடத்திற்கு அதிகமாக கூட்டம் வருவது பற்றி கூறுகையில், "கமலஹாசனின் கட்சியின் கூட்டத்திற்கு அதிக கூட்டம் வருவதாக கூறுகின்றனர். ஏன் ஷகிலா கட்சி ஆரம்பித்தால் கூட தான் கூட்டம் அதிகம் வரும். ஆனால் வரும் கூடமெல்லாம் ஓட்டாக மாறுமா? என்று கேள்வி எழுப்பினார்.

கமலஹாசன் ரயிலில் போனதாக ஊடகங்கள் பெரிதாக பேசுகின்றன, ஆனால் கடந்த 13 வருஷமாக கமலஹாசன் ரயிலிலா சென்றார். விமானத்தில் சென்று தான் பழக்கப்பட்டவர். 

ஆனால் நான் 1980 ஆம் ஆண்டில் இருந்து எங்கள் சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தால் ரயிலில் தான் செல்வேன் என்று மிகவும் குரலை உயர்தி பேசினார்.

மேலும் ஊடகங்கள் ஸ்டெர்லைட் பிரச்னையை இருட்டடிப்பு செய்வதற்காகவே கமல் கட்சியின் கூட்டத்தை பெரிதுபடுத்துவதாக கண்டனம் தெரிவித்தார். எனினும் கமலை ஷகிலாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது கட்சினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!