மத்தியிலும் ஆட்சி மாற்றம் ! மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் !! மக்களே ரெடியா ? நீலகிரியில் ஸ்டாலின் நெத்தியடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Apr 2, 2019, 10:12 PM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலோடு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உருவாகும் என திமுக தலைவர் ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
 

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற்வுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

இன்று நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள் அடங்கிய மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பங்கேற்று  ஆ.ராசாவுக்கு ஆதரவாக உரையாற்றினார். அப்போது மத்தியிலே பாசிச ஆட்சியும், மாநிலத்தில் எடுபிடி ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தையும் உங்கள் முகங்களில் காணப்படும் எழுச்சியையும் பார்க்கும்போது, நாடும் நமதே… நாற்பதும் நமதே என்று எண்ணத் தோன்றுகிறது என கூறினார்.


பாட்டாளிகளின் கையில் செல்போன்களை தவழ செய்தவர் ஆ.ராசா. அப்படித் தவழ வைத்த காரணத்தால் சில எதிரிகளையும் அவர் சம்பாதித்தார். 

தொலைத்தொடர்பில் சில நிறுவனங்களின் ஏதேச்சிகார அதிகாரத்தை ராசா சுக்குநூறாக உடைத்துள்ளார். அதனால் அவர் மீது ஒரு மிகப்பெரிய வீண் பழியை போட்டார்கள். ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கிலே சிறையில் சிக்க வைத்தார்கள். 

அந்த சோதனையிலே மத்திய அமைச்சராக இருந்த அவர், பதவி விலக வேண்டிய சூழல் வந்தது.அதற்காக திமுக தலைவர் கருணாநிதி மிகமிக வருந்தினார். எங்களை போன்றவர்களை அழைத்து விவாதித்தார். மிக இறுக்கமான அந்த மனநிலையில், ராசாவிடம் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் கூறினார். 

தலைவர் கருணாநிதியின் பேச்சை கேட்டு ராசா விலகி இருந்தார். இப்போது அந்த ஊழலே நடக்கவில்லை என்று வந்துவிட்டது என்று ஆ.ராசா குறித்து ஸ்டாலின் கூறினார். 

இதைத் தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி மீது கொலை குற்றச்சாட்டு, கொடநாடு கொலை விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கமாக பேசினார். அவரது பேச்சில் பல இடங்களில் முதல்வர் பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார்.

click me!