அடுத்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஐபிஎஸ் ரூபா...! தேர்தல் நெருங்கும் நேரத்தில்...

Published : Apr 02, 2019, 10:05 PM ISTUpdated : Apr 02, 2019, 10:14 PM IST
அடுத்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஐபிஎஸ் ரூபா...! தேர்தல் நெருங்கும் நேரத்தில்...

சுருக்கம்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான அலுவலகம் கல்லூரி என அனைத்து இடங்களிலும் மேற்கொண்ட வருமானவரி சோதனையில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினரும் பணப்பட்டுவாடாவை தடுக்க பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் பல வினோதமான முறையை பயன்படுத்தி மக்களுக்கு பணத்தை கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் ஒரு விதமாக சப்பாத்தி மாவில் ரூ.500 மற்றும் ரூ.2000 என பணத்தை வைத்து அதனை நன்கு தேய்த்து சப்பாத்தியை தயார் செய்து வீட்டிற்கு வீடு சப்ளை செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் ரூபா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்டு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு மேற்கோளும் காட்டியுள்ளார்.

 

தற்போது பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா குறித்த பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் இதே ஐபிஎஸ் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..