அட்சித் தூக்கிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை !! முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

By Selvanayagam PFirst Published Apr 2, 2019, 8:40 PM IST
Highlights

மருத்துவ சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் 'நீட்' நுழைவுத் தேர்வு மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபோல, தேசிய பட்டியலில் இருக்கும் கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேத்ல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் வெளியிட்டது.  இதில் உள்ள முக்கிய அம்சங்கள் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், சில அறிக்கைகள் நாட்டிம் பாதுபாப்புக்கு பெரும் ஆபத்தானது என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்  உள்ள முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

1 . மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்

2, ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும் 

3,  தற்போதுள்ள ஜி.எஸ்.டி வரி முறை மாற்றி அமைக்கப்படும்.

4. ஜிஎஸ்டி வரி முறைக்காக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குழுவைப் போலவே, கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் 

5.  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்படி, தற்போதுள்ள 100 நாள் வேலை உறுதித் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் 

6.  தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 

7. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் மூன்று ஆண்டுகளில் தொழில் தொடங்க எந்த வித அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை 

8.  2020ம் ஆண்டுக்குள் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் 

9. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், 'நிதி ஆயோக்' அமைப்பு கலைக்கப்படும்.

10. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் 

11. தேசிய மகளிர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்படும்

12. ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் 
13.  தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் மற்றும் மகர் நிலங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் .

14. இலங்கை - பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் களைய தனி வழிமுறைகள் கொண்டு வரப்படும் .

15.  இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 20 சதவீதம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

16. ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

17. அவதூறு வழக்கு தொடரும் சட்டப்பிரிவை கிரிமினல் குற்றமாக அல்லாமல் சிவில் குற்றமாக கருத சட்டத்திருத்தம் செய்யப்படும் 

18.  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் 50 சதவீத ஒப்புகை சீட்டு எந்திரத்தை ஆய்வு செய்யும் முறை கொண்டு வரப்படும் 

19.  சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் போல் மற்ற மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது போன்ற முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

மொத்தம் 55 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வெளியிட்டனர். இதில் முக்கிய அம்சங்களாக, விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும் என்றும், "நியாய்" திட்டத்தின் கீழ், வரும் 2030ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!