
தினகரன் மற்றும் தன் தனி செல்வாக்கில் தங்க தமிழ்ச்செல்வன் இறங்கியடிக்க, தனி செல்வாக்கு மற்றும் தி.மு.க. கூட்டணி பலத்துடன் இளங்கோவன் எகிறியடிக்க, ஓ.பி.எஸ். மகனுக்கு தினம் தினம் அக்கப்போராகத்தான் இருக்கிறது தேர்தல் களம். இதற்கு நடுவில் அவர் தந்திருக்கும் ஒரு பிரத்யேக பேட்டியின் ஹைலைட்ஸ் இதோ...
* எனக்கு போட்டியாக இரண்டு முக்கியஸ்தர்கள் நிக்குறாய்ங்கன்னு சொல்லிக்கிறாய்ங்க. காங்கிரஸுல இங்ஙன போட்டிபோட உருப்படியான அள் கிடைக்கல. அதனாலதான் இளங்கோவனை தூக்கியாந்து இங்கே போட்டிருக்காய்ங்க. அவரு ஒரு அழையா விருந்தாளி இந்த மண்ணுக்கு.
* ஆண்டிப்பட்டி மக்களுக்கு நீதியும், நியாயமும் கேக்குறதா பேட்டிகள்ள சொல்லிட்டு திரிஞ்ச தங்கதமிழ்செல்வன் திடீர்னு தேனி நாடாளுமன்றத்துல போட்டி போட ஏன் வந்தாரு? போன தடவை எம்.எல்.ஏ. தேர்தல்ல அம்மாவ வெச்சு செயிச்சாரு, இந்த தடவை என்ன பண்ணப்போறாரு? ஒண்ணும் வேலைக்கு ஆவாது.
* சீனியர்களை தாண்டி நான் சீட்டு வாங்கிப்புட்டேன்னு சொல்றாய்ங்க. எங்கள மாதிரி யங்ஸ்டர்களும் கட்சிக்கும் வேணும். நான் நல்லாத்தானே கட்சி வேலை பார்த்திட்டு இருக்கேம்.
* என்னையையும் அம்மா கட்சியின் பதவியிலிருந்து எடுத்தாங்க, ஆனா கட்சியை விட்டு தூக்கலை. ஆனால் தினகரன் குடும்பத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் லெவலில் இருந்தே தூக்கியெறிஞ்சாங்க. அம்மாவுக்கு ராஜ துரோகம் செஞ்ச குடும்பம்யா தினகரனோடது! அவிய்ங்கள எப்படி மன்னிக்க முடியும்?
* நான் தினமும் முப்பது கோடி லஞ்சம் வாங்குறேம்னு திட்டமிட்டுக் கெளப்பி விடுறாய்ங்க.
* வேட்பு மனுல சொத்து மதிப்ப கரெக்டாதாம் காட்டியிருக்கேம். வேணும்னா கேஸ் போடட்டும், நான் சந்திச்சுக்கிடுதேம்.
* என்னோட வெற்றிக்காக தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துனதாகவும் கெளப்பி விடுறாய்ங்க. ராஜ துரோகம் பண்ணினவர்ட்ட என்ன பேச்சு வேண்டியிருக்குது? நாங்க ஏம் பேசணும் அவர்கிட்ட, எங்க கட்சிக்கு மாளாத ஆதரவு கொட்டிக் கெடக்குது. ...............என்று அடித்துக் கெளப்பியிருக்கிறார்.