
மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பும் திறன் தமிழக அரசுக்கு இல்லை என்றும், பாஜக அரசுக்கு அடி பணிந்தே நடக்கிறது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரம்ஜானை முன்னிட்டு ஏழை முஸ்லீம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், மத்திய –மாநில அரசுகளிடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.
ஆனால் அதற்காக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலையில் தமிழக அரசு இல்லை என தெரிவித்த ஸ்டாலின், பாஜக அரசுக்கு அடிபணிந்து நடக்கும் அரசாக படப்பாடி பழனிசாமி அரசு மாறியுள்ளதாக தெரிவித்தார்.
மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கைவைத்து வருகிறது என குற்றம் சாட்டிய ஸ்டாலின், மாட்டிறைச்சி விவகாரத்தில், மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.