ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. தமிழக அரசுடன் பாஜக.. இலங்கையிலிருந்து திரும்பிய அண்ணாமலை சொன்னது என்ன?

Published : May 04, 2022, 08:01 AM IST
ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. தமிழக அரசுடன் பாஜக.. இலங்கையிலிருந்து திரும்பிய அண்ணாமலை சொன்னது என்ன?

சுருக்கம்

இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு கிடைத்த உதவியைப் போல இலங்கைக்கும் கிடைப்பதற்கான முயற்சிக:ளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு  பாஜக உடன் இருக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு தீர்ந்துபோனதால், எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால், இலங்கையில் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் தாறுமாறாக விலை உயர்ந்தன. இலங்கைக்கு இந்தியா உள்பட பல நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் நிலவரத்தை அறியவும் மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றிருந்தார். இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள், அரசுசாரா அமைப்பினர், ஈழத் தமிழர்களைச் சந்தித்து அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

பிரதமர் மோடி உதவி

நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்த அண்ணாமலை, தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இலங்கையில் உள்ள மிக முக்கியமான பிரச்சினையே டாலர்தான். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதற்காக நம்முடைய நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுவரை ஒன்றரை மில்லியன் டாலர் உதவி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக பிரதமர் மோடி சார்பில் மருத்துவப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது.

 

அண்ணாமலை உறுதி

இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு கிடைத்த உதவியைப் போல இலங்கைக்கும் கிடைப்பதற்கான முயற்சிக:ளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்ப மத்திய அரசிடம் திமுக அரசு அனுமதி கேட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!