கருணாநிதி 'இருக்கை'யை கைப்பற்றினார் ஸ்டாலின்... முதன் முறையாக அறையில் அமர்ந்து கட்சிப்பணி – Newsfast Exclusive

First Published Jun 5, 2017, 1:04 PM IST
Highlights
stalin occupies karunanidhi chair


மோடியை நேரடியாக எதிர்த்து தனது ரேட்டிங்கை எக்கச்சக்க உயரத்துக்கு அள்ளி குவித்து விட்டார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின். 

எம்ஜிஆர் – கருணாநிதி, ஜெயலலிதா – கருணாநிதி, ஸ்டாலின் – ஜெயலலிதா என இரு துருவங்களுக்கு இடையே நடைபெற்று வந்த அரசியல் அறிக்கை போர்கள், பேட்டிகள் பெரும் சூட்டை கிளப்புவது வழக்கம்.

இது போன்ற எதிர்ப்பு பேட்டிகள்  மற்றும் கருத்துக்களே திமுகவையும் அதிமுகவையும் பலமாக வளர்த்தன.
இந்த பாயிண்டை கெட்டியாக பிடித்து கொண்ட மூவர்தான் வெற்றியாளர் ஆனார்கள்.

எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கருணாநிதி மீதான் தீவிர எதிர்ப்பு மற்றும் கருணாநிதிதி ஜெயலலிதா மீது காட்டிய கடும் எதிர்ப்பு ஆகியவை தான் அவரவர் கட்சியின் தொண்டர்களை உயிர்ப்போடு வைத்திருந்தது.

மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட இடைவெளியை ஸ்டாலின் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில்தான் மோடியின் அட்டகாச ஆட்டங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக தமிழக மற்றும் கேரளாவில் அதிக வெறுப்பை அவர் மீது சம்பாதித்து கொடுத்துள்ளன.

பண மதிப்பிழப்பு GST வரி தற்போது மாட்டிறைச்சி பிரச்சனை இவையெல்லாம் தமிழக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வருத்தமடைய செய்துள்ளன.

மேலும் பெரியாரிசவாதிகள், கம்யுனிஸ்டுகள் உள்ளிட்ட பல தரப்பினரும் மோடிக்கு எதிரான கடுப்பில் உள்ளனர்.
இதை சரியாக புரிந்து கொண்ட ஸ்டாலின் சமீபகாலமாக குறிப்பாக கருணாந்தி வைரவிழ மாநாடு போன்றவற்றில் மோடியை நேரடியாக போட்டுக்தாக்கி வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற வன்முறைகளை அடுத்து அரசியல் பரபரபின்றி காணப்பட்ட ஸ்டாலின் தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மோடி எதிர்ப்பு என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்த பின் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், ராகுல் காந்தி ஆகியோர் ஸ்டாலினை திரும்பி பார்க்க தொடங்கியுள்ளனர்.

தேசிய அளவிலான கவனத்தை திசை திருப்பிய ஸ்டாலின்,தற்போது திமுக கட்சியையும் 100% கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அழகிரியின் தொடர் குடைச்சல்களால் கிட்டத்தட்ட 10 வருடங்களை வீணடித்து விட்ட ஸ்டாலின் தற்போது முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி அறையில் அமர்ந்து கட்சி பணிகளை கவனிக்க தொடங்கி விட்டார்.

பொதுவாக திமுக தலைமை அலுவலகம் ஆன அண்ணா அறிவாலயத்தில் முக்கிய வாயிலில் உள்ளே நுழைந்தால் வலது புறம் பொருளாளர் ஸ்டாலின் அறை, கான்ஃபரன்ஸ் அறை ஆகியவை இருக்கும். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி அலுவலகமும் இருக்கும்.

ஆனால் எப்போதுமே கருணாநிதி எப்போதுமே முக்கிய வாயிலை பயன்படுத்த மாட்டார்.இடது புறம் பக்கவாட்டில் உள்ள ப்ரத்யேக வழியாக நேரடியாக இறங்கி தன அறைக்கு சென்று விடுவார்.

ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக மெயின் கேட் வழியாக உள்ளே சென்ற ஸ்டாலின் முதன்முறையாக கருணாநிதி செல்லும் வழியாக உள்ளே சென்று கருணாநிதி அறைக்குள் உள்ள அவரது இருக்கையில் அமர்ந்து கட்சி பணிகளை கவனித்தார்.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதில் மறைந்த என்.பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவது குறித்தும், கோஷ்டிகளை அடக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அண்ணா அறிவாலய வரலாற்றில் திமுக தலைவர் கருணாநிதி அறையை முதன் முறையாக பயன்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் அதிரடி ஆட்டம் இதோடு நின்று விடுமா? அல்லது 4 கால் பாய்ச்சலில் வேகம் எடுக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

click me!