ஸ்டாலின் குரங்கா..!? அதிமுக நல்ல பெண்; அதான் தேமுதிக சுற்றி வருது .மதுரையில் முழங்கிய முதல்வர் எடப்பாடி!!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2020, 9:52 PM IST
Highlights

வீட்டில் வயது வந்த பெண் இருந்தால் அனைவரும் பெண்கேட்டு வருவது போன்று கூட்டணியில் இருப்பவர்கள்  மேலவை உறுப்பினர் பதவி வேண்டி கேட்பார்கள். அதற்கு உரிய நடவடிக்கை கட்சி தலைமையில் இருந்து எடுக்கப்படும்.மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேமுதிக அதிமுகவிடம் அல்லாடிக்கொண்டிருக்கிறது.இதற்காக தான் வயதுக்கு வந்த பெண்ணை உவமையாக கட்டி பிரேமலதாவை உசுப்பேற்றியிருக்கிறார் முதல்வர்.
 

T.Balamurukan

"வீட்டில் வயது வந்த பெண் இருந்தால் அனைவரும் பெண்கேட்டு வருவது போன்று கூட்டணியில் இருப்பவர்கள்  மேலவை உறுப்பினர் பதவி வேண்டி கேட்பார்கள். அதற்கு உரிய நடவடிக்கை கட்சி தலைமையில் இருந்து எடுக்கப்படும்.மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேமுதிக அதிமுகவிடம் அல்லாடிக்கொண்டிருக்கிறது.இதற்காக தான் வயதுக்கு வந்த பெண்ணை உவமையாக கட்டி பிரேமலதாவை உசுப்பேற்றியிருக்கிறார் முதல்வர்.

இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் ஆகியோர் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

 இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள்அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.கமலுக்கு தமிழகத்தில் உள்ள துறைகள் குறித்து எதுவும் தெரியாது சினிமா துறையை மட்டும் தான் தெரியும்.துறைவாரியாக தேசிய விருதுகள் பெற்று வருகிறது தமிழகம்.கிராமத்தில் கூறும் பழமொழிக்கு ஒப்பாக கமல்ஹாசன் கூறுகிறார். விவசாயியாகதான் வருமானவரியை  தற்போது வரையில் காட்டி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அதனுடைய சம்பளத்தில்தான் வருமான வரி கட்டினேன்.அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் நான் விவசாயி என்று,

 மதுரையில் மு.க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தின் போது குரங்கு கதை கூறியுள்ளார். அவர் எண்ணங்கள் போன்று அவ்வாறு உவமை காட்டியிருக்கிறார். குடியுரிமைச் சட்டம் போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் தெளிவாக கூறி விட்டேன். தமிழக வருவாய்த் துறை அமைச்சரும் அது குறித்து தெளிவாக கூறி விட்டார்.கடந்த 2003 ல் பாஜக திமுக கூட்டணியின் போதே என்.பி.ஆர் சட்டம் கொண்டு வரப்பட்டது.2010ல் இதிட்டம் நடைமுறைக்கு வந்தது. முதல் முறையாக திமுக தான் அறிமுகப்படுத்தியது. என்.பி.ஆர் சட்டத்தில் கூடுதலாக மொழி,தாய் தந்தை பிறப்பிடம்,ஆதார்,குடும்ப வாக்காளர் அடையாள அட்டைகளை சமர்பிக்க வேண்டிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றை விரும்பினால் கொடுக்கலாம், கொடுக்காமளும் இருக்கலாம்.  குடியுரிமை திருத்த சட்டம் குறித்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை எந்த முறையில் நடைபெற்றது என்பது விசாரணையின் மூலம் தான் தெரியவரும். 

ராஜகண்ணப்பனுக்கு அதிமுக தான் அவருக்கு விலாசம் கொடுத்தது.அவர் நுழையாத கட்சி இல்லை.அதிமுக விசுவாசத்தை மறந்தவர்கள் முகவரி தெரியாமல் போய்விடுவார்கள்.எந்தத் துறையில் முறையீடு இருந்தாலும் அது உரிய முறையில் விசாரித்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதில் மாற்று கருத்து கிடையாது.

 கிராமப்புறங்களில் இணையதள வசதி வழங்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இது மகத்தான திட்டம். இத்திட்டத்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும்.இத்திட்டம் நிறைவேறும் முன்பே எப்படி ஊழல் என பேச முடியும்.இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் மனதில் நிலையாக அதிமுக நின்றுவிடும் என்ற அச்சத்தில் எதிர்கட்ட்சிகளால் பொய் பிரச்சாரம் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.


வீட்டில் வயது வந்த பெண் இருந்தால்  அனைவரும் பெண்கேட்டு வருவது வழக்கம் தானே.அதுவும் நல்ல பெண்ணாக இருந்தால் பெண்கேட்டு வருது வழக்கம் தானே.அதுவும் நல்ல பெண்ணாக இருந்தால் கேட்பார்கள்.அதுபோன்று கூட்டணியில் இருப்பவர்கள்  பதவி வேண்டி கேட்பார்கள். அதற்கு உரிய நடவடிக்கை கட்சி தலைமையில் இருந்து எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

click me!