மு.க. ஸ்டாலினைப் பார்த்து அஞ்சி நடுங்கும் பாஜக... பிறந்த நாள் விழாவில் ஆ.ராசா தாறுமாறு!

By Asianet TamilFirst Published Mar 1, 2020, 9:50 PM IST
Highlights

அந்தத் தத்துவங்கள் சரிந்தும் சாய்ந்தும் விடக்கூடாது. அதற்காகத்தான் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். இந்தியாவில் தலைமையும் தத்துவமும் ஒருங்கே அமைந்த இயக்கம் என்றால், அது திமுகதான். சாதியை ஒழிக்கவேண்டும் என பெரியாரும், அண்ணாவும் கருத்துகள் மூலம் போராடினார்கள். ஆனால், தலைவர் கலைஞரோ ஒருபடி மேலே சென்று சமத்துவபுரம் என்ற திட்டத்தையே கொண்டுவந்தார். அவருடையை சித்தாந்தத்தின் வழிவந்த தலைவர் மு.க.ஸ்டாலின்.

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத சமயத்தில் வாலாட்டும் பாஜக இன்றைக்கு மு.க.ஸ்டாலினை பார்த்து அஞ்சி நடுங்குகிறது என்று திமுக எம்.பி.யும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்புச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா பங்கேற்றார். அவர் பேசுகையில், “தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோருடைய பிறந்த நாளெல்லாம் ஒரு தத்துவத்தின் அடையாளம். அரசியல் கட்சியின் தலைவராக மட்டுமே திமுக தலைவரை சுருக்க முடியாது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் தத்துவம், கொள்கைகளைக் காப்பாற்றக்கூடியவர். 
அந்தத் தத்துவங்கள் சரிந்தும் சாய்ந்தும் விடக்கூடாது. அதற்காகத்தான் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். இந்தியாவில் தலைமையும் தத்துவமும் ஒருங்கே அமைந்த இயக்கம் என்றால், அது திமுகதான். சாதியை ஒழிக்கவேண்டும் என பெரியாரும், அண்ணாவும் கருத்துகள் மூலம் போராடினார்கள். ஆனால், தலைவர் கலைஞரோ ஒருபடி மேலே சென்று சமத்துவபுரம் என்ற திட்டத்தையே கொண்டுவந்தார். அவருடையை சித்தாந்தத்தின் வழிவந்த தலைவர் மு.க.ஸ்டாலின். அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மை நீங்கலாக சமதர்தம், இறையான்மை, ஜனநாயகம் ஆகியவற்றை முதல்வராக இருந்த சமயத்தில் கட்டிக் காத்தவர் தலைவர் கலைஞர். தற்போது மு.க.ஸ்டாலின் தலைவராக உள்ள சமயத்தில் மதச்சார்பின்மையைக் காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவிவருகிறது.


இந்த மதச்சார்பின்மைக்கு ஊறுவரும்போது, முதல் ஆளாக குரல் கொடுத்ததோடு இரண்டு கோடி கையெழுத்தைப் பெற்றுத் தந்த மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லை. தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத சமயத்தில் வாலாட்டும் பாஜக இன்றைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து அஞ்சி நடுங்குகிறது. இதில் எந்த ஐயப்பாடும் இல்லை” என ஆ.ராசா பேசினார்.

click me!