மதுரையில் முதல்வர் காரை மறிக்க முயன்றதால் பரபரப்பு.!! இருவரை போலீஸ் பிடித்து விசாரணை நடத்துகிறது.

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2020, 8:46 PM IST
Highlights

மதுரை விமானநிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக வரும் வழியில் இருவர் முதல்வரை  வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இந்த சம்பவத்தால் கதி கலங்கி நின்றனர்.
 

T.Balamurukan

மதுரை விமானநிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக வரும் வழியில் இருவர் முதல்வரை  வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இந்த சம்பவத்தால் கதி கலங்கி நின்றனர்.

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மதுரை வழியாக சென்றார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டுச் செல்லும் போது, விரகனூர் ரிங்ரோடு அருகே  முதல்வரை வழிமறித்து, மனு கொடுக்க முயன்ற இருவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏழு தமிழர் விடுதலை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த காந்தி மற்றும் தமிழ் தேசிய பேரியக்க மதுரை மாவட்ட துணை பொறுப்பாளர் கருப்பையா என்பது தெரியவந்தது.  அவர்கள் வைத்திருந்த மனு ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.  காவல் ஆணையரிடம் வழங்கும் வகையில் எழுதப்பட்டு இருந்து அந்த மனுவில், " ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் 161ன்-படி தீ்ர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி, இரண்டு ஆண்டாகியும் ஆளுநர் கையெழுதிடாமல் தாமதிக்கிறார். முதல்வர் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றி, ஆளுநருக்கு அழுத்தம் தரவேண்டும். ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வழிவகை செய்யவேண்டும். மதுரைக்கு முதல்வர் வருகையொட்டி அவரை நேரில் சந்தித்து  மனு கொடுக்க அனுமதிக்கவேண்டும்," என குறிப்பிட்டு இருந்தனர்.
 இது தொடர்பாக இருவரிடம் சிலைமான் போலீஸார் விசாரிக் கின்றனர். முதல்வரின் கான்வாயில் இருவர்  நுழைய முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன்,நந்தினி,முருகன்,ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்திருக்கிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஏழுபேர் விடுதலையில் ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது," இருவரிடம் விசாரிக்கிறோம். கைது செய்வது பற்றி அதிகாரிகள் முடிவெடுப்பர்.  அவர்களை எச்சரித்து அனுப்ப வாய்ப்புள்ளது" என்றனர்.

click me!