ராசா, கனிக்கு மந்திரி பதவி... ராகுலை புலம்ப விட்ட ஸ்டாலின்... அப்பா டெக்னீக்கை யூஸ் பண்ணும் பலே கேம்?

By Asianet TamilFirst Published May 14, 2019, 10:20 AM IST
Highlights

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 6 அமைச்சர் பதவிகளுக்காக தன் தந்தை கருணாதிதி அலைகழிப்பு செய்யப்பட்டது போல, இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். 

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுக்களுக்கு யார் ஆளப்போகிறார்கள் என்ற முடிவு தெரிய இன்னும் பத்து தினங்களே உள்ளது. ஒட்டு மொத்த நாடே அந்த முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆளும்  அதிமுகவும் , எதிர்கட்சியான திமுகவும் ஆளுக்கொரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளன.

போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி தங்களுக்கே யென அதிமுக , திமுக  என இரண்டு கட்சிகளும்  மார்தட்டி வருகின்றன
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளுமே நெருப்பாக உள்ளன.

ஆனால் கடந்த 2011 ,2016 என அடுத்தடுத்த இரண்டு ஐந்தாண்டுகள்   தோல்வியடைந்து பெரும்  சருக்கல்களையும், சோதனைகளையும் சந்தித்து வரும் திமுகவுக்கு இப் பாராளுமன்றத் தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்றால் மிகையாகாது.

எனவே இத்தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வெற்றியை எந்த சமரசமுமின்றி முழுக்க முழுக்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சரிவிலிருந்து மிள வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

தற்போது காங்கிரஸ்வுடன் கூட்டணி என்றாலும் , தேர்தல் முடிவுக்குப் பின்னர் சூழலுக்கேற்ப  நிலைபாட்டை மாற்றிக் கொள்ளும் முடிவுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

ஆம்...
திமுக தயவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியிடம் கனிசமாக அமைச்சர் பதவிகளை கேட்டு பெறுவது , அல்லது தாங்கள் கேட்கும் பதவிகளைத்தர முன்வரும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் ஸ்டாலின் தீர்தமாக உள்ளார்.

எப்படியும் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள ஸ்டாலின், திமுக விற்கு மந்திரி சபையில் கனிசமான சீட் தருபவர்களுக்கே ஆதரவு என்ற மனநிலையில் உறுதியாக உள்ளதாக திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைய உள்ள மந்திரி சபையில் , முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி , டி.ஆர் பாலு, ஜெகத் ரட்சகன், பழனிமாணிக்கம் , காந்திச் செல்வன், உள்ளிட்ட குறைந்தது 6 பேருக்கு அமைச்சர் பதவியும், குறிப்பாக தகவல் தொடர்பு , கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரம், இரயில்வே உள்ளிட்ட  கேபினட் பதவிகளை கேட்டுப் பெற்றாக வேண்டும் என்பதில் ஸ்டாலின் முடிவாக உள்ளார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 6 அமைச்சர் பதவிகளுக்காக தன் தந்தை கருணாதிதி அலைகழிப்பு செய்யப்பட்டது போல, இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். 

அதனால் தான் முன் கூட்டியே தேசிய அளவில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் முயற்ச்சிகளில் அவர் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் ,பாஜக அல்லாத மூன்றாவது புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என கூறி வரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வுடனான நேற்றைய ஸ்டாலின் சந்திப்பு,  திமுகவின் அவசியத்தை காங்கிரசுக்கு உணர்த்துவதற்கான ஒரு யுக்தி என அரசியல் நோக்ககர்கள் கூறுகின்றனர்.

ஒரு வேலை தேர்தல் முடிவு காங்கிரசுக்கு பாதகமாக அமைந்தாலும், அப்படியே ஆதரவை பாஜகவிற்கு வழங்குவது என்ற முன் முடிவில் திமுக இருந்து வருகிறது, முன்னால் திமுக தலைவரும் தன் தந்தையுமான கருணாநிதி, வாஜ்பாஜ் ஆட்சிக்கு  குறைந்த பட்ச செயல் திட்ட உடன்படிக்கை என்ற பார்முலாவில் ஆதரவு கொடுத்ததைப் போல இம்முறை தானும் அதே பார்முலாவை  கையிலெடுக்க ஸ்டாலின் தயாராகியுள்ளார் என்கிறது உடன் பிறப்புகள் வட்டாரம்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்திதான் பிரதம வேட்பாளர் என்று முழங்கிய ஸ்டாலின், தேர்தல் முடிவின் நெருக்கத்தில் கேபினேட் பதவி கணக்குடன் காய் நகர்த்துவதை அறிந்த இளவரசர் ராகுல்"வெறி டேன்ஜிரஸ் பொலிடீசியன்ஸ் இன் டமில் நாடு" என்று புலம்புகிறாராம். 

click me!