மே 23 ஆம் தேதிக்குப் பின் மூன்றாவது அணி ! ஸ்டாலின் அதிரடி !!

By Selvanayagam PFirst Published May 14, 2019, 8:25 AM IST
Highlights

இந்தியாவில் மே 23 ஆம் தேதி ரிசல்ட்டுக்குப் பிறகுதான்  மூன்றாவது அணி அமையுமா ? என்பது குறித்து தெரிய வரும் என கூறி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கும் முன்பே திமுக – காங்கிரஸ் கட்சியிடையே அசைக்க முடியாத கூட்டணி உருவானது. தேர்தல் அறிவித்த பின்னர் அந்த கட்சிகளிடையே நல்ல ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருந்தது.

தேர்தலுக்கு முன்பே கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராகுல் காந்திதான் பிரதமர்  என முதன்முதலாக அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போதெல்லாம், ராகுல்தான் பிரதமர் என தொடர்ந்து சொல்லிவந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைப்பது குறித்து எதிர்கட்சித் தலைவர்களிடையே பேசி வருகிறார்.

கடந்த வாரம் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போன்றோரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருக்கிறார்,
இதனிடையே நேற்று மாலை கேசிஆர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். 1 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். ஆனால் நேற்று இது குறித்து இரு தரப்புமே பேட்டி அளிக்கவில்லை. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கேசிஆருடனானா சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறினார். அவர் தமிழகத்தில் உள்ள கோவிகளுக்கு வழிபாடு நடத்த வந்தார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார் என தெரிவித்தார்.

மூனறாவது அணி அமைய வாய்ப்புள்ளதா ? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தான் மூன்றாவது அணி அமையுமா என்பது குறித்து பேச முடியும் என தெரிவித்தார்.

இத்தனை நாளும் ராகுல்தான் பிரதமர் என்று சொல்லி வந்த ஸ்டாலின் தற்போது மூன்றாவது அணி குறித்து பேசியிருப்பது, காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!