விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தொடரும் தடை ! மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு !!

Published : May 14, 2019, 09:01 AM IST
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தொடரும் தடை ! மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு !!

சுருக்கம்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான  தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

விடுதலைப்புலிகள் மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!