வி.வி.ஐ.பி. அண்ணனும், வி.ஐ.பி. தங்கச்சியும் ஓவர் சீன் போட காரணம் என்ன?

By Vishnu PriyaFirst Published Apr 21, 2019, 5:50 PM IST
Highlights

*    என்னை மாதிரி கேள்வி கேட்கிற ஆள் இருக்குற வரைக்கும், தப்பு செய்யுற அரசியல்வாதிகள் தலைக்கு மேல் கத்தி தொங்கிட்டே இருக்கும்: கமல்ஹாசன். 
 

*    என்னை மாதிரி கேள்வி கேட்கிற ஆள் இருக்குற வரைக்கும், தப்பு செய்யுற அரசியல்வாதிகள் தலைக்கு மேல் கத்தி தொங்கிட்டே இருக்கும்: கமல்ஹாசன். 
(அது சரிண்ணே, விஸ்வரூபம் பட ரிலீஸுக்காக வீட்டை விற்குற அளவுக்கு போனீங்களே! ஆனா இந்த தேர்தல்ல விளம்பரத்துக்கு மட்டும் கோடி கோடியா அள்ளி விட துட்டு எங்கேயிருந்து வந்துச்சு?ன்னு தொடர்ந்து உங்களை கேட்டுட்டேஇருக்காங்களே. எப்ப பதில் சொல்லுவீக?)

*    வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்தை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை: தமீமுன் அன்சாரி. 
(அஸ்லாமு அழைக்கும் பாய்! போன சட்டமன்ற தேர்தல்ல அரவக்குறிச்சி தொகுதியில தேர்தலை இப்படித்தான் ரத்து செஞ்சு விட்டாய்ங்க. அப்ப ஏன் இந்த டயலாக்கை நீங்க எடுத்துவிடல? ஜெயலலிதாவை பார்த்து நடுக்கமா இருந்துச்சோ? அழைக்கும் அஸ்லாம் பாய்!)

*    தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரம் இடிந்து ஒன்றரை ஆண்டைக் கடந்த நிலையிலும் அதை சீர் செய்ய அ.தி.மு.க. என்ன நடவடிக்கை எடுத்தது?: கனிமொழி. 
(தேர்தல்ன்னு வந்துட்டா அண்ணனும், தங்கச்சியும் இந்துக்கள் தோளில் கைபோட்டுகினு  ‘நண்பேன் டா’ன்னு கதையடிக்க ஆரம்பிச்சிடுவீங்களே. அண்ணன் என்னடான்னா ‘கோயிலுக்கு போகும் என் மனைவியை தடுப்பதில்லை’ங்கிறார், நீங்க என்னடான்னா இப்படி டயலாக் விடுறீங்க. ஓஓஓஒ...ஓ.கே.ஓ.கே. நாலு தொகுதி இடைத்தேர்தலும், வேலூர் தொகுதியில் புது தேர்தலும் முடியணும்ல! அதானே பார்த்தேன்.)

*    கீழ்தரமான ஆடியோவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டியது இப்போது மிக முக்கியமானது. இப்படி வன்மமாக பேசியவர்களை கண்டுபிடித்து கைது செய்து தண்டிக்க வேண்டும்: ஹெச்.ராஜா. 
(நல்லா சொன்னீங்கண்ணே, ஆனா அப்படி கைதாகையில ‘நான் அதை பேசி பரப்பலிங்க, என் அட்மினோட வேலை’ன்னு சொல்லி தப்பிட்டானுங்கன்னா என்னா பண்றது? இதற்கான முன் உதாரணங்கள் இருக்கிறது தங்களுக்கு தெரியாததில்லை ஹிஹிஹி...)

*    வட மாநிலத்தில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை புரிந்து கொண்ட ராகுல், தென் மாநிலத்தின் ஒரு தொகுதியான வயநாட்டில் போட்டியிடுகிறார்: ஜி.கே.வாசன். 
(அவராச்சும் மாநிலம் விட்டு மாநிலம் பாய்ஞ்சு வந்து போட்டியிடுறார் தில்லா. ஆனா அ.தி.மு.க.ட்ட கெஞ்சி கூத்தாடி வாங்குன ஒரு சீட்டுலேயும் நீங்க நிக்கலையே! ஏம்ணே? தோல்வி பயம் தடுத்துடுச்சோ! ராகுலுக்கு வந்தா சட்னி , உங்களுக்கு வந்தா ரத்தம்.)

click me!