நம்பாதீங்க நம்பாதீங்க! பொய் பொய்யா சொல்றானுங்க! மக்கள் எங்களை காப்பாத்துவாங்க!: ஆட்சி கவிழும் பயத்தில், அலறுகிறாரா ஜெயக்குமார்?

By Vishnu PriyaFirst Published Apr 21, 2019, 5:28 PM IST
Highlights

தேர்தலுக்கு முன்பு வரை ஏக கெத்தாய் பேட்டி கொடுப்பது, அறிக்கை விடுவது! என்று வார்த்தைக்கு வார்த்தை தெனாவெட்டு காட்டி வந்தது தமிழக அரசும், அதன் அமைச்சர்கள் கூட்டமும். அதிலும், அ.தி.மு.க.வின் மவுத் பீஸாக பார்க்கப்படும் அமைச்சர் ஜெயக்குமாரின் அலட்சிய வார்த்தைகளும், எதிரணியை அவர் தூக்கிச் சாப்பிட்டு பேசிய பேச்சுகளும் ‘ஏகபோக அதிகார’ ரகங்கள். 
 

தேர்தலுக்கு முன்பு வரை ஏக கெத்தாய் பேட்டி கொடுப்பது, அறிக்கை விடுவது! என்று வார்த்தைக்கு வார்த்தை தெனாவெட்டு காட்டி வந்தது தமிழக அரசும், அதன் அமைச்சர்கள் கூட்டமும். அதிலும், அ.தி.மு.க.வின் மவுத் பீஸாக பார்க்கப்படும் அமைச்சர் ஜெயக்குமாரின் அலட்சிய வார்த்தைகளும், எதிரணியை அவர் தூக்கிச் சாப்பிட்டு பேசிய பேச்சுகளும் ‘ஏகபோக அதிகார’ ரகங்கள். 

இந்நிலையில்  நாற்பது தொகுதி நாடாளுமன்ற தேர்தலும், பதினெட்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வாக்கு பதிவானது தமிழகமெங்கும் ஆளும் இரு ஆட்சிகளுக்கும் எதிராக சென்றிருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதை அ.தி.மு.க. அமைச்சரவை வட்டாரம் முதலில் நம்ப மறுத்தது. ஆனாலும் சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் இதையே ரிப்பீட் செய்ய ஆடிக்கிடக்கிறது அதிகார மையம். 

அதாவது, ’2014 தேர்தலில் தனக்கு ஒரேயொரு எம்.பி.யை மட்டுமே தந்ததால் தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு துவக்கத்தில் இருந்தே அன்பு இல்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் நலன், உரிமையை பாதிக்கும் வகையில் பலப்பல திட்டங்களையும், நடவடிக்கைகளையும் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவரால் தமிழகத்தின் நிழலைக் கூட காயப்படுத்த முடியவில்லை. ஆனால் ஜெ., மரணத்துக்குப் பின் பன்னீர், எடப்பாடி இருவரையும் கரங்களில் வைத்துக் கொண்டு, அவர்களை மிரட்டி அடிபணிய வைத்து, தமிழகத்தை பல வகைகளில் வஞ்சிக்கிறார். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் சுயநல நோக்கில் இவர்கள் இருவரும் மோடியிடம் தமிழக உரிமையை அடகுவைத்துவிட்டனர். எனவே மத்திய, மாநில இரு அதிகார மையங்களும் அகற்றப்பட வேண்டும்!’ எனும் நோக்கிலேயே மிகப் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணி முப்பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் நடந்த பதினெட்டில் எப்படியும் பதினொன்றிலாவது வெல்வார்கள்! எனும் ரீதியில் தகவல்கள் அதிகார மையங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனவாம்.

 

இந்நிலையில் , தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “சமூக வலைதளக்களம் வேறு, யதார்த்தம் என்பது வேறு. ஒரு விஷயத்தை டிரெண்ட் செய்ய நிறைய சாஃப்ட்வேர் கம்பெனிகள் உள்ளனர். அவ்வர்கள் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேசி உண்மை போலாக்கும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குவர். அதை வைத்தெல்லாம் ஒரு ஆட்சியின் நிலையை கணக்கிட முடியாது. மக்கள்தான் உண்மையான நீதிபதிகள், அவர்கள் இந்த கணிப்புகளை பொய்யாக்குவார்கள்.” என்று கூறியுள்ளார். 

அமைச்சர் அந்த கணிப்புகளை பொய்! பொய்! என புலம்பியதில் உள்ள நடுக்கமும், மக்களே நீதிபதிகள் என்று அவர்களிடம் தஞ்சமடைந்திருப்பதும்....ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நடுக்கத்தை காட்டுகிறது! என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 
பார்ப்போம்!

click me!