கருணாநிதியை விட 10 மடங்கு கெத்து... மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்க இந்திய தலைவர்கள் ஏங்குகிறார்கள்... டி.ஆர்.பாலு பெருமிதம்..!

Published : Jan 03, 2020, 04:45 PM IST
கருணாநிதியை விட 10 மடங்கு கெத்து... மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்க இந்திய தலைவர்கள் ஏங்குகிறார்கள்... டி.ஆர்.பாலு பெருமிதம்..!

சுருக்கம்

கருணாநிதியைவிட பத்து மடங்கு அதிகமாக கட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்துவதாக அக்கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் புகார் செய்த பிறது செய்தியாளர்களை சந்தித்த அவர், '’திமுக தலைவர் அனைத்து பிரச்சினைகளையும் மிக நுணுக்கமாக அணுகுகிறார். ஸ்டாலின் தேர்தல் ஆணையரை நேரில் வந்து சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நேரில் வந்ததன் மூலம், திமுக தொண்டர்களுக்கு செய்தி ஒன்றை கூறிக் கொள்கிறார். அதாவது, அனைவரும் உஷாரா இருங்கள் என கூறுகிறார்.

தமிழ்நாட்டிலிருக்கும் மீடியாக்கள் திமுக பெறப் போகும் வெற்றியை பார்க்கத்தான் போகிறீர்கள். திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பான தலைவராக இருக்கிறார். இந்திய தலைவர்கள் அனைவரும் ஸ்டாலினை பல விஷயங்களில் தலைமை ஏற்க அழைப்பு விடுக்கிறார்கள். முன்பு கருணாநிதி தலைவராக இருந்தபோது கட்சி செயல்பட்டதை விட 10 மடங்கு அதிக செயல்பாடுகளோடு இப்போது ஸ்டாலின் தலைமையில் செயல்படுகிறது’’ என அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

திமுககாரன் ரெண்டு பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான். ஆனா, நாம..? பொதுக்குழுவில் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை..!
210 இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி.. பொதுக்குழுவில் அடித்துக் கூறும் இபிஎஸ்