
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் 21 மாநகராட்சியியை திமுக கைபற்றியுள்ளது இதே போல நகராட்சி பேரூராட்களிகளையும் திமுக கைப்பற்றியது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மற்றும் துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் என பங்கீட்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டனர். இதன் காரணமாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் திமுகவினரின் செயல் பாடுகளை கண்ட கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முதலமைசரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி அறத்தை காக்க வேண்டும் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக சொல்ல வேண்டும் என திருமாவளவன் கேட்டிருந்தார். இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் வலியுறுத்தியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியி்ட்டார். அதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார். பதவி விலகவில்லையென்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்தார். மேலும் திமுகவினரின் இது போன்ற செயல் தன்னை குறுக வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை காக்க உடனடியாக பதவியை விலகி விட்டு தன்னை வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார். இந்த நடவடிக்கையில் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றி பெற்ற நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்ற நிலையில் உள்ளனர்.
கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் தனக்கு வாக்களிக்க உறுப்பினர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவழித்த நிலையில் தற்போது திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லியது எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்வர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் பதவி கூட விலகி விடலாம் தலைமையிடத்தில் தன்னை வந்து நேரில் சந்திக்குமாறு திமுகதலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது வெற்றி பெற்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கான நடவடிக்கையை உடனடியாக மாவட்ட செயலாளர்கள் எடுக்கும் படி ஸ்டாலின் கூறியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கையில் மாவட்ட செயலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தால் அவர் என்ன கூறுவார். தங்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் சென்னைக்கு வருவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். திமுக தலைவரை பார்க்க வாய்ப்பு கிடைகாதா என எண்ணியிருந்த நிலையில் ஸ்டாலின் நேரடியாக தன்னை வந்து சந்திக்குமாறு கூறியிருந்தும் சென்னை வருவதற்கு பயத்தில் உள்ளனர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக நிர்வாகிகள்.