
மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக முன்னாள் அமைச்சரும் முதன்மை செயலாளருமான துரைமுருகன் துரைமுருகன் மூச்சுதிணறல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.