ஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் கவர்ந்த ஸ்டாலின். முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டிய ஜி.கே மணி.

Published : Jul 27, 2021, 12:31 PM ISTUpdated : Jul 27, 2021, 12:32 PM IST
ஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் கவர்ந்த ஸ்டாலின். முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டிய ஜி.கே மணி.

சுருக்கம்

சட்டப்பேரவையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது ஆணை வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுக்கள் எனவும் கூறினார்.  

வன்னியர்கள், சீர் மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு  முதலமைச்சரை சந்தித்து பா.ம.க தலைவர் ஜி.கே. மணி மற்றும் பா.ம.க நிர்வாகிகள் ஆகியோர் நன்றி தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5% கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாகவும், சட்டப்பேரவையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது ஆணை வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுக்கள் எனவும் கூறினார்.

மேலும், இந்த சட்டத்தினால் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்கள் மட்டுமல்லாமல் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும், காலம் தாழ்த்தி நடைமுறையாக இருந்தாலும் இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். சமூக நிதியின் அடிப்படை சாதி வாரியான கணக்கெடுப்பு தான் என்றும், மத்திய அரசும், மாநில அரசும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றாலும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்