என் கணவர் எடுத்ததைவிட மோசமான ஆபாச படமெல்லாம் கிடைக்குது... ராஜ் குந்த்ராவுக்காக ஷில்பாஷெட்டி வாக்காலத்து..!

Published : Jul 27, 2021, 12:27 PM IST
என் கணவர் எடுத்ததைவிட மோசமான ஆபாச படமெல்லாம் கிடைக்குது... ராஜ் குந்த்ராவுக்காக ஷில்பாஷெட்டி வாக்காலத்து..!

சுருக்கம்

ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் சாட்சிகளாக மாறிய ஊழியர்கள் ஹாட்ஷாட் செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாசமான கிளிப்புகளை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.   

ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் சாட்சிகளாக மாறிய ஊழியர்கள் ஹாட்ஷாட் செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாசமான கிளிப்புகளை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக, நடந்து வரும் ஆபாச வழக்கில் முக்கிய சாட்சிகளாக ராஜ்குந்த்ராவின் ஊழியர்கள் 4 பேர் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊழியர்கள் ஹாட்ஷாட்களிலிருந்து ஆபாசமான கிளிப்புகளை நீக்கி உள்ளனர். இந்த நான்கு ஊழியர்களையும் ராஜ் குந்த்ரா முன் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் வீடியோக்களை அழித்தார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை. 

ராஜ்குந்த்ராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் தொலைபேசியை ஆய்வு செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையுனர் திட்டமிட்டுள்ளனர். ராஜ்குந்த்ராவில் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஜாமீனுக்காக உயர்நீதிமன்றத்திற்கு செல்வார் என அவரது வழக்கறிஞர் சுபாஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 

ராஜ்குந்த்ராவின் கைது சட்டவிரோதமானது. ஆபாசமாக கருதக்கூடிய ஒரு வீடியோ கூட இல்லை. 4000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 67 ஏ பிரிவின் கீழ் சட்டவிரோதத்தை நிரூபிக்கும் வீடியோவில் எந்தவொரு பாலியல் தொடர்பான வெளிப்படையான செயலையும் போலீசாரால் சுட்டிக்காட்ட முடியவில்லை. பயன்படுத்தப்பட்ட பிரிவின் மீதமுள்ளவை ஜாமீன். முன்னரே முனாவர் பாரூக்கியை உச்ச நீதிமன்றம் இதே அடிப்படையில் விடுவித்தது ” எனத் தெரிவித்தார். ’’தனது கணவர் பயன்படுத்திய வீடியோக்களை விட, இப்போதெல்லாம், இதே போன்ற வீடியோக்கள் பல்வேறு OTT தளங்களில் கிடைக்கிறது.  உண்மையில், ஹாட்ஷாட்டில் கிடைப்பதை விட சில வீடியோக்கள் ஆபாசமானவை’’ என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?