தயாளு அம்மாள் புகைப்படத்துடன் கவிதை..! நெகிழும் ஸ்டாலின்..!

Published : May 10, 2020, 03:20 PM ISTUpdated : May 10, 2020, 03:27 PM IST
தயாளு அம்மாள் புகைப்படத்துடன் கவிதை..! நெகிழும் ஸ்டாலின்..!

சுருக்கம்

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது! என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!

மே மாதத்தின் 2ம் ஞாயிறான இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பேஸ்புக், ட்விட்டர், 
வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் தங்கள் தாயுடனான நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்னையர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் அன்னையர் தின கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார்.

தனது தாயார் தயாளு அம்மாளின் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கும் அக்கவிதையில் கூறியிருப்பதாவது, 

உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
- எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

அவர்களால் தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!

உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!
#MothersDay

இவ்வாறு ஸ்டாலின் தனது அன்னையர் தின வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!