ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்.. நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி.. ஃபுல் லிஸ்ட்

By karthikeyan VFirst Published May 10, 2020, 2:37 PM IST
Highlights

ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டில் 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 
 

கொரோனாவை கட்டுப்படுத்த மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தையடுத்து, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன. 

அதனடிப்படையில், ஏற்கனவே தமிழக அரசு, ஊரடங்கு தளர்வு குறித்த விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இதற்கிடையே, நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பெட்ரோல் பங்குகளுக்கான நேரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகைக்கடைகளுக்கான நேரம் குறித்து ஒரு அரசாணை வெளியிட்டது. 

அந்த அரசாணையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் மற்ற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் தனிக்கடைகள் திறக்கலாம் என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அந்த தனிக்கடைகள் என்பதில் எவையெல்லாம் அடங்கும் என்ற பட்டியலை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 34 வகையான கடைகள் இடம்பெற்றுள்ளன. அந்த கடைகளின் பட்டியல் இதோ..

1. டீ கடைகள்(பார்சல் மட்டும்)

2. பேக்கரிகள்(பார்சல் மட்டும்)

3. உணவகங்கள்(பார்சல் மட்டும்)

4. பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள்

5. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்

6. சிமெண்ட், ஹார்டுவேட் மற்றும் சானிடரிவேர் விற்கும் கடைகள்

7. மின் சாதன பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

8. மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

9. கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

10. வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள்

11. மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

12. கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

13. சிறிய நகைக்கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை)

14. சிறிய ஜவுளிக்கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை மற்றும் ஊரக பகுதிகளில் மட்டும்)

15. மிக்ஸி, கிரண்டர் பழுதுநீக்கும் கடைகள்

16. டிவி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

17. பெட்டிக்கடைகள்

18. ஃபர்னிச்சர் கடைகள்

19. சாலையோர தள்ளுவண்டி கடைகள்

20. உலர் சலவையகங்கள்

21. கொரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22. லாரி புக்கிங் சர்வீஸ்

23. ஜெராக்ஸ் கடைகள்

24. 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

25. 2 சக்கர மற்றும்  4 சக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள்

26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்

27. விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

28. டைல்ஸ் கடைகள்

29. பெயிண்ட் கடைகள்

30. எலக்ட்ரிகல் கடைகள்

31. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்

32. நர்சரி கார்டன்கள்

33. மரக்கடை மற்றும் பிளைவுட் கடைகள்

34. மரம் அறுக்கும் கடைகள்

முடி திருத்தும் கடைகள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்கப்படக்கூடாது. மேற்கண்ட கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!