அயோத்தி விவகாரத்தில் கடமையை கச்சிதமாக செய்த ஸ்டாலின்.!! பாஜகவையை ஒரு கணம் சிந்திக்க வைத்துவிட்டார்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2019, 3:14 PM IST
Highlights

 நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சினைக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே  தீர்ப்பை வழங்கியதற்கு பிறகு,  அதை எந்த விருப்பு  வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் விசாலமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு ,  மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத் தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றமே திர்வு கண்டிருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆய்யோத்தி தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியில் கட்சித் தலைவர்கள் தங்களுது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அனைவருமே தீர்ப்பில் உள்ள சாதக பாதகங்ளை விவாதிப்பதை தவிர்ந்து நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில்  கருத்துகூறி வருகின்றனர்.  இந்நிலையில் தனது கருத்தை அறிக்கையின் மூலம்  திமுக தலைவர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ளார். அதில் 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சினைக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே  தீர்ப்பை வழங்கியதற்கு பிறகு,  அதை எந்த விருப்பு  வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் விசாலமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு ,  மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத் தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

click me!