'வழங்கப்பட்டது தீர்ப்பு தான்.. நீதியல்ல'..! சீமான் காட்டம்..!

By Manikandan S R SFirst Published Nov 9, 2019, 3:04 PM IST
Highlights

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம். பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது.

நாடெங்கிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்க வில்லை. அதன் காரணமாக மாற்று இடத்தை அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் கோவில் கட்டலாம் என்றும் அதற்கான ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இவையனைத்தையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கப்பட்டது தீர்ப்பு தானே ஒழிய நீதி அல்ல என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம். பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது!" என்று பதிவிட்டிருக்கிறார்.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல!

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது!

— சீமான் (@SeemanOfficial)

 

தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று இரவில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

click me!