தீர்ப்பு வந்துடுச்சி, இப்ப நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க...!! பதுசா பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2019, 1:28 PM IST
Highlights

அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என தெரிவித்துள்ளார்.  இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும்.   இந்த தீர்ப்பை சமநிலையுடனும் மற்றும் திறந்த மனதுடனும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  

அயோத்தி குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு எனவும் நாட்டு மக்கள் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்றும்  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது அதில், ஆயோத்தியில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதிக்கு அடியில் உள்ள  கட்டிடம் இஸ்லாமிய கட்டிட முறையில் இல்லை, அது வேறொரு கட்டடத்தின் முறையில்  உள்ளது. ஆனால் அது இந்து கோவில் கட்டிடம் என்று சொல்லுவதற்கும் தொல்லியல் துறையில் ஆதாரம் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நீண்ட கால இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்  சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவித்தது.  பின்னர் அந்த  இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்டலாம் எனவும்,  அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அயோத்தியில் சுமார் 5 ஏக்கர் அளவிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும்  உத்திரபிரதேச மாநில அரசுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. 

அடுத்த மூன்று மாத த்திற்குள் கோவில் கட்ட குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என தெரிவித்துள்ளார்.  இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும்.   இந்த தீர்ப்பை சமநிலையுடனும் மற்றும் திறந்த மனதுடனும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  இந்த தீர்ப்புக்கு பின்னர் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும்  நாட்டு மக்கள் பேணவேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  
 

click me!