தன் கட்சியை சேர்ந்த இரண்டு பெரிய முதலைகளின் அரசியல் ஜாதகத்தை அடியோடு முடித்துவிட்டிருக்கிறார் தி.மு.க. தலைவரான ஸ்டாலின்
அயன் சினிமாவில் கிளைமேக்ஸுக்கு நெருக்கமான காட்சி ஒன்றில் வரும் அதகள டயலாக்…. ‘லட்டுல வெச்சேன்னு நினைச்சியா! நட்டுல வெச்சேன் டா’ என்று வில்லன் பேசி முடிச்சதும் பிரபுவின் ஆட்டம் குளோஸ் ஆகும். அதே ரூட்டில் தன் கட்சியை சேர்ந்த இரண்டு பெரிய முதலைகளின் அரசியல் ஜாதகத்தை அடியோடு முடித்துவிட்டிருக்கிறார் தி.மு.க. தலைவரான ஸ்டாலின்.
கோயமுத்தூர் சிட்டியின் நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன் தான் தி.மு.க.வில் முழுநேர அரசியல்வாதியானார். பொதுவாக புதிதாய் அரசியலுக்கு வரும் பெண்கள் ஆர்பாட்டங்களில் கொடி பிடிப்பதும், போராட்டங்களில் கோஷமிடுவதுமாய் இருப்பார்கள். ஆனால் மீனாவின் லெவலே வேறாக இருந்தது. அவர் ஆர்பாட்டத்திற்கு வந்து நின்றால், அவரோடு செல்ஃபி எடுக்க கழக பெண்கள் முண்டியடிக்கும் வகையில் பணம் மற்றும் கெட்-அப் ரீதியில் உச்சமாக இருந்தாராம். சட்டென, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் எனும் பதவியையும் பிடித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வைபரேஷன் துவங்கியதுமே ‘நம்ம மேயர்’ என்றுதான் தி.மு.க.வின் ஒரு டீம் அவரை ப்ரமோட் செய்தது. தான் கவுன்சிலராக போட்டியிட இருக்கும் வார்டு! என்று சொல்லி ஒரு சில வார்டுகளை செலக்ட் பண்ணி அங்கே பல லட்சம் ரூபாய்க்கு நன்கொடை, நலத்திட்ட பணிகள், அன்பளிப்புகள் என்று அள்ளிவிட்டார் மீனா ஜெயக்குமார். ஆனால் கவுன்சிலர் வேட்பாளர் லிஸ்டிலேயே அவர் பெயர் வரவில்லை.
கவுன்சிலரானால்தானே மேயராவாய்! என்று அவரை அங்கேயே முடித்துவிட்டிருக்கிறார்கள் மேயர் பதவிக்கு எய்ம் பண்ணிய சில கோவை தி.மு.க. அதிகார மையங்கள். கொதித்த மீனா, சரியான தருணத்துக்காக வெயிட் பண்ணினார். இந்நிலையில் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் கோவையில் செயற்குழு கூட்டம் நடந்திருக்கிறது.
அப்போது, மாநில நிர்வாகி எனும் அடிப்படையில்,மேடையேறிப் பேசிய மீனா, மேடையில் அமர்ந்திருந்த கோவை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களில் ஒருவரும், மாஜி துணை மேயர் மற்றும் எம்.எல்.ஏ.வான நா.கார்த்திக் என்பவரை வெச்சு விளாசி தள்ளிவிட்டார். ‘உன் பொண்டாட்டிக்கு மேயர் சீட் வேணும்னா நேர்மையா முயற்சி பண்ணு. என்னோட வாய்ப்பை ஏன் கெடுக்குற?’ என்று துவங்கி, தன்னைப் பற்றி பல வதந்திகளை பரப்பி, தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் செய்ததே கார்த்திக் தான் என்பது போல் பேசித் தள்ளிவிட்டார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பானது. இந்நிலையில், கோவை மேயர் ரேஸில் முக்கிய நிலையில் இருந்த கார்த்திக்கின் மனைவியும், கவுன்சிலருமான இலக்குமி இளஞ்செல்வியின் வாய்ப்பு ஊசலாடியது. அடுத்த சில நாட்களில், கல்பனா என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டார். துணை மேயர் பதவியும் ஆண் ஒருவருக்குப் போனது. மீனா பேசிய பேச்சால்தான் கார்த்திக் குடும்பத்துக்கு பதவியில்லாமல் போனது! என்று கோவை தி.மு.க.வில் பரபரப்புகள்.
‘இதற்குதானே ஆசைப்பட்டேன்’ என்பது போல் மீனாவும் சந்தோஷமானாராம். இந்நிலையில், ஞாயிறு மதியத்தில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஒரு அறிக்கையின் மூலம், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட மீனா, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
தி.மு.க. தலைமையின் இந்த நடவடிக்கையை மிக சாதுர்யமானதாக குறிப்பிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதாவது ‘மீனா சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து கார்த்திக் மனைவியின் மேயர் வாய்ப்புக்கு செக் வைத்தார்கள். இதன் மூலம் சக கட்சி நபர் மீது வதந்தியை பரப்பி, அவரது வளர்ச்சியை முடக்க நினைத்தால் இப்படித்தான் வாய்ப்புகள் பறிபோகும்! என காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க : இது தான் உங்க நீதியா முதல்வரே..? திமுகவை எதிர்த்து போராட்டத்தில் காங்கிரஸ்...!
அதேபோல் உட்கட்சிப் பிரச்னையை இப்படி பப்ளிக்காக பேசி, எதிர்க்கட்சிக்காரர்களே கேவலமாக பேசுமளவுக்கு செய்ததற்காக மீனா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆக அதற்கும் அடி, இதற்கும் அடி என்று டபுள் ஆக்ஷன் காட்டிவிட்டார் ஸ்டாலின்.” என்கிறார்கள்.
ப்பார்றா!...