
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவை வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்ய பார்கிறார் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 60 ஆண்டு கால அரசியல் பயணம் முடிவடைந்ததையடுத்து அவருக்கான வைர விழா நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.
இதில் பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு. வருமான வரித்துறைக்கு எந்த நிர்பந்தமும் மத்திய அரசு கொடுக்கவில்லை.கைதிகளுக்குள் தகவல் தொடர்பு நன்றாக இருக்கிறது.அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் தகவல் தொடர்பு முறைப்படி இல்லை.
மதுபான கடைகளை பாரபட்சமின்றி இழுத்து மூட வேண்டும்.நீட் தேர்வால் எந்த பாதிப்பு இல்லை. அடுத்த ஆண்டு பா.ஜ.க மூலம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும் அரசியல் ஆக்க கூடாது.கருணாநிதி என்பவர் பொதுவான அறிவுத்திறன் கொண்டவர். அவரை வைத்து தற்போது ஸ்டாலின் வருங்கால கூட்டணிக்கு வித்திடுகிறார்.
கருணாநிதி வைர விழா நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சியினரையும் அழைத்திருக்க வேண்டும். காரணம், கருணாநிதி அனைவரிடமும் சகலாமாக பழகியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.