
தமிழகத்தையே குழப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும். ஆனால் அந்த இரண்டு அணிகளுக்குள்ளேயும் குச்சியை விட்டு ஓவராய் குழப்பும் ஒரே மனிதர் பெருந்துறை எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாசலம்தான்.
இவர் மேல் ரெண்டு அணிகளும் செம கடுப்பில் இருக்கின்றனர். தோப்புவை பற்றி விமர்சிக்கும் நடுநில அ.தி.மு.க.வினர் ‘எடப்பாடி அணிக்கு எதிராக என்னவெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையையும் செய்கிறார் தோப்பு வெட்ங்கடாசலம். ஒரு கூட்டத்தை கூட்டி ரகசிய ஆலோசனை போட்டு, அந்த தகவலை திட்டமிட்டு வெளியில் பரப்ப விடுகிறார்.
சொந்த மாவட்டத்தில் நடக்கும் எடப்பாடியின் கூட்டத்தை புறக்கணித்தார், கோவை டூ சேலம் செல்லும் முதல்வரை வழியில் நின்று கூட வரவேற்பதில்லை. ஆக இதையெல்லாம் பார்த்துவிட்டு இவர் பன்னீர் அணி பக்கம் சாய்கிறார் என்று எடப்பாடி அணி கடுப்பானது.
தங்கள் பக்கம் வெங்கடாசலம் வருகிறார் என்று குதூகலமாக பன்னீர் அணியினர் அவரிடம் பேச ஆரம்பிக்கும் வேளையில் ‘நான் இன்னமும் சசிகலா அணியில்தான் இருக்கிறேன்.’ என்று இவர்களுக்கும் கட்டையை போடுகிறார்.
அதேநேரத்தில சில அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ.க்களும் தன்னிடம் தொடர்ந்து பேசி வருவதாக சொல்லி ஏதோ தனி அணி அமைப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இரண்டு தரப்புக்கும் டென்ஷனை கொடுக்கிறார்.
ஆக மொத்தத்தில் ஒரு நிலையில்லாமல் கூத்தடிக்கும் தோப்பு வெங்கடாசலத்தின் மேல் ஆத்திரமானஇரு அணிகளின் தலைவர்களும் ‘அவரை கண்டுக்காதீங்க. கூத்தாடித்தனமா நடக்கும் அவரை தனியாவே கழட்டி விட்டுடலாம்.
அவரை நம்பி நம்ம கூட்டத்தில் வெச்சா பிறகு நம்முடையை மூவ்களை தெரிஞ்சுகிட்டு பிறகு நமக்கே டார்ச்சர் கொடுப்பார். அதனால அவரோட சப்போர்ட்டை எதிர்பார்க்கவோ, அவரை நம்பி எதிலேயும் இறங்கவோ வேணாம்.’ அப்படின்னு தங்களோட நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்காங்க.
இதனால தனி மரமாகிறார் தோப்பு வெங்கடாசலம். குழப்ப வேலைகளால் யாருக்கோ குடைச்சல் கொடுக்க நினைச்சவர் தானே பஞ்சாயத்தில் சிக்கிக்கொண்டதுதான் செம காமெடி.” என்கிறார்கள்.
உட்கட்சிக்குள்ளேயே இங்கி பிங்கி பாங்கி போட்ட தோப்பு வெங்கி உங்க நிலை இப்படியாயிடுச்சே!