மேயராக இருக்கும் போதே மக்களின் குறைகளை தீர்க்காத ஸ்டாலின்... தேர்தல் களத்தை தெறிக்கவிடும் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Mar 29, 2021, 1:32 PM IST
Highlights

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆகையால், தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் நட்ராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அண்மையில் 62,000 கோடி ரூபாய் செலவில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த பெருநகரம் சென்னை எனவும் முதல்வர் கூறினார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவினர் செல்லும் இடங்களில் எல்லாம், அதிமுகவை பற்றி அவதூறாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிமுக அரசின் சாதனைகள், நன்மைகளை நாங்கள் எடுத்து சொல்கிறோம். திமுக ஆட்சி காலத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கூலிப்படை என இருந்தது. அதனை முடிவுக்கட்டிய ஜெயலலிதா, தூய்மையான ஆட்சியை வழங்கினார்.

தற்போது, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளதாக விருது வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இதுபோன்ற விருதுகளை பெற்றதில்லை. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மக்களையும் பார்க்கவில்லை, அவர்களின் குறைகளையும் தீர்க்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

click me!