மக்கள் நீதி மய்யம் எடுபடாது.. கமல்ஹாசனை எகிறி அடித்த நடிகை கவுதமி..

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 1:21 PM IST
Highlights

அதில் எந்த  புதுமையும் இல்லை, ஆட்சிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறுகிறார்கள். நான் முதலில் சொல்லிக்கொள்வது, மக்கள் உண்மையிலேயே அந்த மாற்றத்தை விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

ஒவ்வொரு புதிய கட்சியும் செய்யும் அதே மார்க்கெட்டிங் தந்திரத்தை தான் தற்போது கமலஹாசனின் மக்கள் நீதி மையம் செய்து வருகிறது என நடிகை கௌதமி விமர்சித்துள்ளார்.  மாற்றத்தை கொண்டு வருவோம் என மக்கள் நீதி மையம் கூறுகிறது, ஆனால் உண்மையிலேயே அம்மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் கமல்ஹாசனுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி, இவர் பல ஆண்டுகள் கமலஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான உறவை முறித்துக் கொண்ட கௌதமி, பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி கூறியதாவது: 

கமல்ஹாசனுடனான உறவை முறிந்து  பல ஆண்டுகள் ஆகிறது. அது முடிந்து போன கதை, அது குறித்து பேசுவதில் அர்த்தமில்லை. தமிழகத்தை அதிமுக-திமுக என்ற திராவிட கட்சிகள் ஆதிக்கம் செய்து வருகின்றன. எனவே அக் கட்சிகளில் இணைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. மோடி, வாஜ்பாய் ஆகிய தலைவர்கள் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக பாஜகவில் இணைந்துள்ளேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் கூறுவதைப் போலவேதான், மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற அதே மார்க்கெட்டிங் டெக்னிக்கை மக்கள் நீதி மய்யம் பாலோப் செய்கிறது. 

அதில் எந்த  புதுமையும் இல்லை, ஆட்சிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறுகிறார்கள். நான் முதலில் சொல்லிக்கொள்வது, மக்கள் உண்மையிலேயே அந்த மாற்றத்தை விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அதேபோல மக்கள் நீதி மையம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகி இருப்பதால், அது திமுகவின் வாக்கு வங்கியை பிடிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,. அது திமுக வாக்கு வங்கியை பிரிக்குமா? இல்லையா என்பது தனக்கு தெரியாது. ஆனால் அப்படி நடந்தாலும் அது அதிமுக பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.  

 

click me!