சுப்ரமணியம், கனகராஜ் மரணத்தில் மர்மம் - நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

 
Published : May 09, 2017, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
சுப்ரமணியம், கனகராஜ் மரணத்தில் மர்மம் - நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சுருக்கம்

stalin demands investigation subramani suicide

நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்  ஆகியோர் மரணத்தை  நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் கொடநாடு காவலாளி கொலை, கொள்ளையில் தேடப்பட்ட கனகராஜ் கார் மோதி இறந்தார் இவர்களது மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.. 

விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சுப்பிரமணியம் தற்கொலை என்ற செய்தி நம்பும்படி இல்லை. சுப்பிரமணியம் தற்கொலையில் மர்ம முடிச்சுகள் அடங்கியுள்ளதாக ஸ்டாலின் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார். 

விஜயபாஸ்கர் மற்றும் சுப்பிரமணியம் இருவரிடமும்  வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சருக்கு எதிராக முக்கிய சாட்சியாக இருந்த சுப்பிரமணியம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுப்பிரமணியத்தின் தற்கொலை ஒட்டுமொத்த விசாரணையை திசைதிருப்பும் விதமாக அமைந்துள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

வருமான வரித்துறை  வழக்கில் முக்கிய சாட்சி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும்  ,சுப்பிரமணியம் மரணத்தை தற்கொலை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்று அவர் தெரிவித்தார். 

இதே போன்று  ஜெயலலிதாசின்  முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கொடநாடு காவலாளி கொலையில் தேடப்பட்டவர். ஆனால் கனகராஜ் மரணம் கொடநாடு மர்மத்தை காப்பாற்றும் விபத்தா என்ற கேள்வி எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 
எனவே கனகராஜ், சுப்பிரமணியம் ஆகியோர் மரணத்தை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!