விண்ணை முட்டும் சிமெண்ட் விலை.. கறாராக உத்தரவு போட்ட ஸ்டாலின்.. அலறியடித்து ஆலோசனை நடத்திய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2021, 10:01 AM IST
Highlights

நேற்று முன் தினம் சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விலை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், கம்பி உற்பத்தியாளர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும், சாதாரண மனிதன் கூட விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் உறுதிப்பட கூறினார்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கலை பண்பாட்டு துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இயல் இசை நாடக மன்றம், தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறையில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்தும், வரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், 60வயது நிறைவடைந்துள்ள கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார். 

மேலும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கட்டுமான பொருட்கள் விலை உச்சத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் விலைக்குறைக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும், நேற்று முன் தினம் சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விலை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், கம்பி உற்பத்தியாளர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும், சாதாரண மனிதன் கூட விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் உறுதிப்பட கூறினார்.

கொரோனா காலம் முடிந்தவுடன் புதிய தொழில் நிறுவனங்கள் முதலீட்டிற்கான அதிகளவில் வருவார்கள் என கூறிய அவர்,ஏற்கனவே புதிய தொழில் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் போடவும் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா காலக்கட்டம் முடிந்தவுடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.கீழடியில் 7ம் கட்ட ஆய்வு நடைப்பெற்று வருவதாக கூறிய அவர், மிக விரைவில் அகழ் வைப்பகம்பணி முடித்த உடன் மற்ற பணிகள் தொடரும் என்றும், இந்த ஆய்விலேயே சில முக்கியமான பொருட்கள்  கிடைத்திருப்பதாகவும், கொந்தகையில் தான் மனித எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆய்வு முடிந்த பிறகு அதன் விவரங்கள் முழுமையாக தெரியவரும் எனவும் அவர் கூறினார். 

 

click me!