தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைபெறும்.. மின்வாரியம் அதிரடி ஆணை.

Published : Jun 17, 2021, 09:35 AM ISTUpdated : Jun 17, 2021, 09:37 AM IST
தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைபெறும்.. மின்வாரியம் அதிரடி ஆணை.

சுருக்கம்

முந்தைய மாத மின் கட்டணம், குறிப்பிட்ட மாதத்துக்கான 2019ம் ஆண்டு செலுத்திய கட்டணம் அல்லது கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் வழங்கியிருந்தது.   

தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைப்பெறும் என  மின்வாரியம் ஆணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்கள் கொரோனா இரண்டாம் அலை  அதிகரித்தன் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதனால், முந்தைய மாத மின் கட்டணம், குறிப்பிட்ட மாதத்துக்கான 2019ம் ஆண்டு செலுத்திய கட்டணம் அல்லது கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் வழங்கியிருந்தது. 

இந்த சலுகைகள் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மின் கணக்கீடு செய்யும் பணிகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் எனவும், இனி வழக்கம்போல் மின் கட்டணம் கணக்கீடு செய்து, அதற்கான தொகையை செலுத்தும் பழைய நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!