பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபா.. காமலீலைகள் குறித்து தீவிர விசாரணை.

Published : Jun 17, 2021, 09:21 AM IST
பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபா.. காமலீலைகள் குறித்து தீவிர விசாரணை.

சுருக்கம்

சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா விசாரணைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.   

பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லியிலிருந்து நேற்றிரவு சிபிசிஐடி போலீசாரால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக டெல்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே நேற்று காலை சென்னை சிபிசிஐடி போலீசார் டெல்லி போலீஸ் உதவியுடன் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். 

அதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை சிபிசிஐடி  போலீசாரால் விமான மார்க்கமாக சென்னை விமான நிலையம்  அழைத்துவரப்பட்டார். 

சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா விசாரணைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். 

மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
PREV
click me!

Recommended Stories

NDA கூட்டணி மேடையில் மாம்பழம்.. அதிகார துஷ்பிரயோகம்.. பொங்கியெழுந்த ராமதாஸ்.. அன்புமணி பதில் இதுதான்!
அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. ஆளுநர் உங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமா..? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி