டார்கெட் கொங்கு ADMK MLAக்கள்..! காய் நகர்த்திய உதயநிதி.. திமுகவின் புதிய ஆப்பரேசன்..!

By Selva KathirFirst Published Jun 17, 2021, 9:11 AM IST
Highlights

உதயநிதி கோவை வந்துவிட்டு சென்ற அடுத்த வாரம் தான் எதிர்கட்சி துணைத் தலைவர், எதிர்கட்சி கொறடா தேர்வு எல்லாம் அதிமுகவில் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே உதயநிதி கோவை வந்ததற்கான காரணத்தை மோப்பம் பிடித்து உடனடியாக அதிமுக எம்எல்ஏக்களை எல்லாம் கோழிக்குஞ்சுகளை அமுக்குவது போல் அமுக்கி தனது வீட்டு தோட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அடைத்து வைத்துவிட்டதாக கூறுகிறார்கள். 

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் கொங்கு மண்டலத்தில்  இதுவரை இல்லாத அளவிற்கு திமுக தோல்வியை தழுவியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட கொங்கு மண்டலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த தோல்வியை அந்த கட்சியின் மேலிடத் தலைவர்களால் ஜீரனிக்க முடியவில்லை என்கிறார்கள். அதிலும் கோவை மற்றும் சேலத்தில் திமுக வேட்பாளர்கள் படு தோல்வியை தழுவியுள்ளனர். சேலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவால் வெல்ல முடிந்தது. ஆனால் கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் இதே நிலை நீடிக்க கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. இதற்காக கொங்கு மண்டலத்தில் கட்சியை சீரமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சொல்கிறார்கள். தற்போதைய சூழலில் கொங்கு மண்டலத்தில் திமுக விவகாரங்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இருந்து வருகிறார். ஆனால் இவர்களை வைத்து கட்சியை கொங்கு மண்டலத்தில் சீரமைக்க முடியாது என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார்.

இதனிடையே கனிமொழியை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பார் இந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் களப்பணியாற்றி தனது திறமையை வெளிப்படுத்த உதயநிதி முயற்சிப்பதாக சொல்கிறார்கள். கொங்கு மண்டல பொறுப்பாளராக கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்த தகவல் அறிந்த அடுத்த நிமிடமே உதயநிதி கோவை புறப்பட்டுச் சென்றார். அங்கு மூன்று நாட்கள் வரை அவர் தங்கியிருந்தார்.

இந்த கோவை திடீர் பயணத்திற்கு காரணமே அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை திமுக பக்கம் வளைக்கத்தான் என்கிறார்கள். கோவையை பொறுத்தவரை அதிமுக – திமுக எம்எல்ஏக்களாக இருந்தாலும் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் திமுகவின் முக்கிய புள்ளி ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் உதயநிதியை சந்தித்து பேச ஏற்பாடு நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தால் மாவட்டச் செயலாளர் பதவி, இடைத்தேர்தலில் வென்றால் அமைச்சர் பதவி என்றெல்லாம் இதற்கு ஆசைகாட்டியதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் உதயநிதியின் திடீர் கோவை வருகை எஸ்.பி.வேலுமணியை உஷாராக்கியதாக சொல்கிறார்கள். உதயநிதி கோவை வந்துவிட்டு சென்ற அடுத்த வாரம் தான் எதிர்கட்சி துணைத் தலைவர், எதிர்கட்சி கொறடா தேர்வு எல்லாம் அதிமுகவில் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே உதயநிதி கோவை வந்ததற்கான காரணத்தை மோப்பம் பிடித்து உடனடியாக அதிமுக எம்எல்ஏக்களை எல்லாம் கோழிக்குஞ்சுகளை அமுக்குவது போல் அமுக்கி தனது வீட்டு தோட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அடைத்து வைத்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் ஆளும் கட்சியாக இருந்த போது வரும் மாமூலை விட அதிக மாமூல் வரும் அவசரப்பட வேண்டாம் என்று எம்எல்ஏக்களுக்கு எஸ்பி வேலுமணி தரப்பில் உறுதி அளித்ததாகவும் சொல்கிறார்கள்.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் கடைசி நேரத்தில் உதயநிதியை சந்திப்பதை கைவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இது தற்காலிக முடிவு தான் என்றும் திமுக தரப்பில் பேரத்தை அதிகரிக்க அதிகரிக்க அதிமுக எம்எல்ஏக்களில் சிலர் மாவட்டச் செயலாளர்கள் கனவுடன் கட்சித் தாவ தயாராகவே உள்ளதாகவும் கோவை வட்டார அரசியல் பேச்சு தூள் பறக்கிறது.

click me!