ஸ்டாலினை வெல்ல ஒரு கொம்பனும் இல்லை...அழகிரியை தெறிக்க விட்ட துரைமுருகன்!!!

Published : Aug 14, 2018, 02:02 PM ISTUpdated : Sep 09, 2018, 07:49 PM IST
ஸ்டாலினை வெல்ல ஒரு கொம்பனும் இல்லை...அழகிரியை தெறிக்க விட்ட துரைமுருகன்!!!

சுருக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் உங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறோம்; எங்களை வழிநடத்துங்கள் என திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினுக்கு செயற்குழு கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் உங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறோம், எங்களை வழிநடத்துங்கள் என திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினுக்கு செயற்குழு கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து துரைமுருகன் புகழராம் சூட்டியுள்ளார். பின்னர் பேசிய துரைமுருகன், கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு திமுக தலைவர் கருணாநிதி கற்பித்தார். மேலும் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பார். எம்.ஜி.ஆர்.வுடன் நான் நெருக்கமாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை பிரியவில்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். 

திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின் என புகழராம் சூட்டினார். மேலும் இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை என என்றார். விரைவில் தலைவராக உள்ள செயல் தலைவரே என்று கூறிய போது துரைமுருகன் பேச்சுக்கு பலத்த கரவொலி எழுந்தது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!