அழகிரியை மதுரைக்கு ரிட்டன் டிக்கட் போட வைத்த செயற்குழு பிளக்ஸ்...

By sathish kFirst Published Aug 14, 2018, 1:14 PM IST
Highlights

செயற்குழு கூட்டத்தில் பிளக்ஸ் டிசைனே சொல்லுகிறது யார் அடுத்து திமுக தலவைர் என்பதை உணர்த்தியுள்ளது. 

திமுக கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான கலைஞரின் மறைவு திமுக கட்சிக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும் . அவரது மறைவிற்கு பிறகு தற்போது அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதல் முறையாக செயற்குழு கூட்டம் கூடி இருக்கிறது. இந்த செயற்குழு  கூட்டத்தில் திமுக கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர் அன்பழகன், கனிமொழி, துரைமுருகன்  போன்ற பல முக்கிய புள்ளிகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த செயற்குழு கூட்டத்தின் போது மிக முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படலாம், அந்த முடிவுகல் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் தான் இன்றைய பொழுதே தொடங்கி இருக்கிறது. கலைஞரின் மறைவிற்கு பிறகு முதல் முறையாக கூடி இருக்கும் கூட்டம் என்பதால் தொண்டர்களுக்கு அவரின் வெறுமை கொஞ்சம் நெருடலை அளித்திருக்கிறது.
தொடர்ந்து கலைஞருக்காக சில நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்திய பிறகு இந்த கூட்டம் தொடங்கி இருக்கிறது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெ.அன்பழகன் ஸ்டாலின் தான் திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என தொண்டர்கள் அனைவரும் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். 

மேலும் அவர் பெரியார் , அண்ணா, மற்றும் கலைஞரை காண்பது போலவே ஸ்டாலினையும் கழகத்தினர் காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதை எல்லாம் அவர் தெரிவிக்கும் முன்பாகவே திமுக கட்சி செயற்குழுவிற்காக வடிவமைக்கப்பட்டிருந்த பேனரே ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்பதை சூசகமாக உணர்த்தி இருந்தது என்பது இன்னொரு சிறப்பு .
திமுக கட்சிக்கான பேனர் வடிவமைப்புகளில் வழக்கமாக ஸ்டாலினின் படம் தனியாக தான் இடம் பெற்றிருக்கும். ஒரு பக்கம் கலைஞர் , அண்ணா, பெரியார் ஆகியோரின் படங்களும் , இன்னொரு பக்கம் ஸ்டாலினின் படமும் இடம் பெற்றிருக்கும். ஆனால் இம்முறை முதலில் ஸ்டாலின் படம் அடுத்து கலைஞர், அண்ணா பெரியார் என வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை பார்க்கும் போதே தெரிகிறது, பேனரே ஸ்டாலின் தான் தலைவர் என்பதை முன்னரே உறுதிப்படுத்திவிட்டது என்று. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவேண்டியது மட்டும் தான் பாக்கி.

கடந்த சில நாட்களாக சமாதி, கோபாலபுரம் என தன் பங்கிற்கு அதகளம் செய்துகொண்டிருந்த அழகிரிக்கு செயற்குழு கூட்டத்தில் பிளக்ஸ் டிசைனே சொல்லுகிறது யார் அடுத்து திமுகவின் தலவைர் என்பதை உணர்த்தியுள்ளது. 

click me!