ஸ்டாலின் – டி.டி.வி.தினகரன் ரகசிய சந்திப்பு !! அமைச்சரின் அதிரடிப் பேச்சு !!

Published : May 10, 2019, 11:29 PM IST
ஸ்டாலின் – டி.டி.வி.தினகரன் ரகசிய சந்திப்பு !!  அமைச்சரின் அதிரடிப் பேச்சு !!

சுருக்கம்

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க கடந்த ஆண்டே திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரனும் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளருக்கு  ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும் என தெரிவித்தார்..

ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

திமுகவுடன் இணைந்து  அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது  என குறிப்பிட்டார்.

பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அதிமுகவை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!