யாரோ வேணும்னே வதந்திய கிளப்பி விட்டுட்டாங்க ! புலம்பும் ஜி.கே.வாசன் !!

By Selvanayagam PFirst Published May 10, 2019, 9:18 PM IST
Highlights

தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைவதாக  வரும் செய்திகளில் உண்மையில்லை என்றும், யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்பிவிடுவதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்..
 

கடந்த மாதம் 18 ஆம் தேதி  நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வாசன் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அக்கட்சி தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.

இந்நிலையில்  தேர்தலுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி நடப்பதாகவும் இதற்கான பணிகளில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈடுபட்டுள்ளதாகவும் சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளன. இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் பேசப்பட்டது.

இது குறித்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி, கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தொண்டர்கள், மீண்டும் காங்கிரசில் இணைய வேண்டும் என்று த.மா.காவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், பாஜகவுடன் த.மா.கா இணைவதாக வரும் செய்தியில் உண்மையில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் அறித்த பேட்டியில், பாஜகவில் தமாகா இணைய போவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய். தமிழ் மாநில காங்கிஸ் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். தமாகாவின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் சதி செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

click me!