மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது தான்..! மோடி அதிரடி..!

Published : May 10, 2019, 06:58 PM IST
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது தான்..! மோடி அதிரடி..!

சுருக்கம்

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ள பிரதமர் மோடி தனது பிரச்சார உரையை மேற்கொண்டு வருகிறார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது தான்..! 

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ள பிரதமர் மோடி தனது பிரச்சார உரையை மேற்கொண்டு வருகிறார். தற்போது அரியானா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

மசூத் அசாரை போலவே தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பயங்கரவாதிகளையும் சர்வதேச பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்தார். இருந்தபோதிலும் நாட்டிற்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை பாயும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி.

மேலும் தாங்கள் எப்போதும் எதிர்க்கட்சிகள் குறித்த விமர்சனங்களை வைப்பது இல்லை. அதற்கு மாறாக, தாங்கள் செய்த சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளோம். அதில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவது, மருத்துவ காப்பீடு திட்டம், ஒன்றரை கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடங்கும்.

எதிர்கட்சிகளுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டதால் தான் இவ்வாறு அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் என குறிப்பிட்டார் மோடி.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!