
தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயக முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதால் அதில் யாரும் தலையிட முடியாது என்று கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலினும், தினகரனும் கூட்டு சேர்ந்து சதி செய்து வருகின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது என்றார்.
அதிமுக தேர்தலை கண்டு ஒருபோதும் அஞ்சாது என்றும், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச டெல்லிக்கு வந்துள்ளோம் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தலை ஆணையர்களை சந்திக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும் கூறினார்.
மேலும், அதிமுக கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வதுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.