பதவியை புடுங்கியாச்சு.. ஹாஸ்டலையும் காலி பண்ணிடுங்க... - அடுத்தடுத்து செக் வைக்கும் சபாநாயகர்...!

 
Published : Sep 18, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பதவியை புடுங்கியாச்சு.. ஹாஸ்டலையும் காலி பண்ணிடுங்க... - அடுத்தடுத்து செக் வைக்கும் சபாநாயகர்...!

சுருக்கம்

Speaker Dhanapal has ordered the MLAs to vacate the residence after the MLAs were disqualified from the DDT supporting 18 MLAs.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததையடுத்து எம்.எல்.ஏக்கள் விடுதியையும் காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். 

இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டார். 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், குறுக்கு வழியில் ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததையடுத்து எம்.எல்.ஏக்கள் விடுதியையும் காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 

18 எம்எல்ஏக்களும் சட்டமன்ற விடுதியை காலி செய்ததும் அறைகளுக்கு சீல் வைக்க விடுதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!