"சிறப்பு நீதிமன்றத்தில் அமித் ஷா நேரில் ஆஜர்" குஜராத் கலவர வழக்கு சூடு பிடிக்கிறது...

 
Published : Sep 18, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
"சிறப்பு நீதிமன்றத்தில் அமித் ஷா நேரில் ஆஜர்"  குஜராத் கலவர வழக்கு சூடு பிடிக்கிறது...

சுருக்கம்

Amit Shah Testifies In Riots Case In Which Maya Kodnani Is Accused Of Murder

குஜராத் மாநிலம், நரோடா காம் எனும் இடத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று சாட்சியம் அளித்தார்.

கோத்ரா கலவரம்

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரம் வெடித்து ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். அவரின் அமைச்சரவையில் அமித் ஷாவும், மாயா கோட்னானி என்ற பெண்ணும் அமைச்சர்களாக இருந்தனர்.

நரோடா காம் வழக்கு

2002ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த அடுத்த நாளில்,  நரோடா காம் எனும் இடத்தில் பிப்ரவரி 28-ந்தேதி நடந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 82 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில் அமித் ஷா, மாயா கோட்னானி ஆகியோரும் அடங்குவர்.

4 மாதம் கெடு

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு  விசாரணை செய்து வருகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன் இந்த வழக்கில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, 4 மாதங்களுக்குள் நரோடா காம் வழக்கின் விசாரணையை முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்பு இல்லை

இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான மாயா கோட்னானி, தனக்கும், கலவரத்துக்கும் தொடர்பு இல்லை. நராடோ காம் பகுதியில் கலவரம் நடக்கும் போது சபர்மதி ரெயில் எரிப்பில் பலியான கரசேவர்களின் உடல்களை சோலா அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லும் பணியை மேற்பார்வையிட்டு இருந்தேன். அந்த நேரத்தில் என்னுடன் அமித் ஷாவுடன் உடன் இருந்தார், அவரிடம் கேட்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

சாட்சி

இதையடுத்து, செப்டம்பர் 18-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று அமித் ஷாவுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. தேசாய் முன் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று ஆஜராகினார். இந்த வழக்கில் அமித் ஷாவும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா வருகை

அப்போது அவர் அளித்த சாட்சியத்தில், “ நான் சோலா அரசு மருத்துவமனையில் மாயா கோட்நானியை அன்று காலையில் சந்தித்தேன். மருத்துவமனையைச் சுற்றி போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தியதையடுத்து, மாயாவை போலீசார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் இருந்து அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தெரியாது’’ எனத் தெரிவித்தார்,

இதற்கிடையே நரோடா பாட்டியா என்ற இடத்தில் 96பேர் கொல்லப்பட்ட வழக்கில், மாயா கோட்நானிக்கு 28ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!