காங்கிரசை ஓரம் கட்டும் ஸ்டாலின்…. புதுக் கூட்டணி அமைக்க ராகுல்காந்தி அதிரடி பிளான் !!

By Selvanayagam PFirst Published Oct 16, 2018, 7:55 AM IST
Highlights

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ் இயக்க விழாவை உள்ளூரில் இருந்துகொண்டே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் அமமுக, மக்கள் நீதி மையம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கடசிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில், நேற்று உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ் இயக்க விழா நடந்தது; 22 கட்சிகளின் தலைவர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுவார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலையில் நடந்த விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல், நேற்று காலையே, ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள, மாந்தோப்பு பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார்.

இது குறித்து, தி.மு.க.,முக்கிய தலைவர் ஒருவர் பேசும்போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு  இரட்டை இலக்கத்தில், 'சீட்' ஒதுக்க வேண்டும்; இல்லையேல், கூட்டணியில் இடம்பெறுவது பற்றி பரிசீலிக்க வேண்டியதிருக்கும்' என காங்கிரஸ் கட்சியின்  மேலிடத்தில் இருந்து திமுக தலைமைக்கு  தகவல் கூறப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த கடுமையான நிலைப்பாடு  தி.மு.க., தலைமைக்கு அதிருப்தியை அளித்துள்ளது.



இதனிடையே  மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், கமல் அளித்த பேட்டியில், 'காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்' என்றார். கமல் இப்படி பேசியதற்கு, காங்கிரஸ் மேலிடமே காரணம் என, சொல்லப்படுகிறது.

அதாவது, காங்கிரஸ் தலைமையில், அமமுக, பா.ம.க., மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து, புதிய அணியை உருவாக்குவது குறித்து, டெல்லி மேலிடம் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவல், தி.மு.க., தலைமைக்கும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்  நேற்று நடந்த தமிழ் இயக்க விழாவிற்கு, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, அவர்களை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், அவ்விழாவை புறக்கணித்து விட்டு, பண்ணை வீட்டிற்கு, ஸ்டாலின் சென்றார். அங்கு ஓய்வெடுப்பதாக, ஒரு தரப்பிலும், புதிய கூட்டணி தொடர்பாக ஆலோசிப்பதாக, மற்றொரு தரப்பிலும் பேசப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா ? அல்லது புதிய கூட்டணி உருவாகுமா ? பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

click me!